நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியம் கூறுகையில் ; எடப்பாடி யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என தமிழக… Read more: அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..,
சென்னையில் நடைபெற்ற 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சிவகாசி அரசன் மாடல் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், விருதுநகர் மாவட்ட ரைபில் கிளப்பை சேர்ந்த அக்ஷயாஸ்ரீ 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபில் ஜூனியர் பிரிவில் 391 புள்ளிகள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததோடு, மேலும் மூன்று பிரிவுகளில் மூன்றாம் இடம் பிடித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மற்றொரு வீராங்கனையான துர்காஶ்ரீ 10 மீட்டர் பீப் சைட் ஏர்… Read more: துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு 5 பேர் தேர்வு…
சென்னையில் இருந்து நேற்று இரவு 7.05 மணிக்கு, பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 160 பயணிகள்,5 விமான ஊழியர்கள், உட்பட 165 பேர் இருந்தனர். இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான… Read more: நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இயந்திர கோளாறு.,
பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் இரண்டாம் கட்டப் போட்டிகள் 6 மாநிலங்களில் கோலாகலமாக நேற்று (07/09/2025) நடைபெற்றது. பெங்களூரு ஈஷா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளும்… Read more: ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மன்னர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு படித்து வரும் என்சிசி மாணவன் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தும் சாதனை படைத்தார். தமிழ்நாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஹரிஹரனுக்கு இன்று கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி என்சிசி அலுவலர் கேப்டன் பகுத்தறிவாளன் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என்சிசி… Read more: தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சியில் துவங்கினார் அதனைத் தொடர்ந்து வருகின்ற 20 ஆம் தேதி சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜய் வருகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் கண்காணிப்பாளரிடம் ஏழு இடங்களில் அனுமதி கேட்டு அனுமதிக்கப்பட்டது திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில்… Read more: புத்தூர் பகுதியில் பேச தவெக விஜய்க்கு அனுமதி..,
அரியலூர்மாவட்டம் , திருமானூர் நடு இராஜவீதிலுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அலுவலக கூட்டரங்கில்,அரியலூர்சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர்அறிவுரையின்படிநடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இயக்கத்தை தீவிரபடுத்துதல்,வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை votechoriroko.in இணையத்தில் பதிவு செய்தல்,Applicatiom Form-6,7,8,8A கையா ளுதல்,வாக்காளர் முகாம் நடைபெறும் போது, முகாமில் அதிக அளவில் இளைஞர் காங்கிரஸார் கலந்து கொண்டு பணி செய்தல்,அதிக அளவில் இளைஞர்களை , இளைஞர் காங்கிரஸில்… Read more: இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..,
புதுக்கோட்டை மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேபர் பிளாக் சாலை அமைப்பதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேஷர் இதேபோன்று மாநகராட்சி ஐந்தாவது வார்டு கோவில்பட்டியில் சத்துணவு மையத்திற்கு சுற்றுச்சூழல் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கு பத்து லட்சம் நிதி… Read more: சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் இன்று (16/09/2025) நடைபெற்றது. இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி அவர்கள், டிம்பர் மர சாகுபடி குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு… Read more: மரம் நடும் விழா மூலம் தங்கசாமிக்கு அஞ்சலி.,
நாகை மாவட்டம் வானவன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் அதே பகுதியில் சுமார் மூன்று தலைமுறையாக குடும்பத்தோடு வசித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டு நருகே ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் சுந்தரேசன் அருகாமையில் உள்ள 100 குழி நிலத்தில் வெட்டிவேர் சாகுபடியும் செய்து வருகிறார். இந்த நிலையில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படும் இடத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சிலர் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ… Read more: வெட்டிவேர் சாகுபடியை அழித்த வேதாரண்யம் வட்டாட்சியர்..,