• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கோவையில் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் ..,

BySeenu

Feb 19, 2026

பரமபூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் துவங்கியது.

ராம்நகர்,பகுதியில் உள்ள , ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள இதில்,மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் ஜன்ம தினோத்சவத்தை நினைவுகூரும் வகையில்,பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பாரம்பரியமாக பால்குண மாதத்தில் நடத்தப்படும் இதற்கான துவக்க விழாவில், மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திரர் வித்யாதீஷர் ,உடுப்பி ஸ்ரீ பாலிமாரு மட பீடாதிபதி வித்யாராஜேஸ்வரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சப்தாஹ விழாவை முன்னிட்டு தினமும் குருராஜ சன்னிதானத்தில் காலை 7.30 மணிக்கு அபிஷேகத்துடன் அஷ்டோத்தர பாராயணம், பஞ்சாம்ருத அபிஷேகம், லட்ச புஷ்பார்ச்சனையுடன் பாதபூஜை, கனகாபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாமங்களாராதி, மாலை 7 மணிக்கு தீபோத்ஸவம் மற்றும் மஹாதீபோத்சவம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் என கோவை ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கத்தினர் தெரிவித்தனர்.