• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேனி: தீர்க்கமாக உழைத்தால், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி: அமைச்சர் ஐ.பி.,

தீர்க்கமாக உழைத்தால், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் 100க்கு 100 சதவீதம் வெற்றி ‘வாகை’ சூடலாம் என, தேனியில் நடந்த தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.

தேனி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தேனி என்.ஆர்.டி., நகரில் அமைந்துள்ள ஐ.எம்.ஏ., மஹாலில் நேற்று (ஜன.30) மாலை 6:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து,
அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:
கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகள் தளபதியார் அவர்கள் தான் முதல்வராக இருப்பார். முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தேர்தல் மட்டும் நின்று விட்டது. தற்போது வந்து விட்டது.
15 வார்டு இருந்தாலும், அதில் 14 வார்டுகள் வரை வெற்றி வாகை சூட முயற்ச்சிக்க வேண்டும்.

கூட்டணி கட்சியில் காங்., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஏ.ஐ.எப்.பி., மற்றும் ஏ.டி.பி., உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதனால் கூட்டணி ஒதுக்குவதில் சிரமம் உள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கி கொடுத்தாலும், அவை வெற்றி பெற வேண்டும்.
இப்போது ஆளுகின்ற இயக்கமாக இருக்கின்ற கால கட்டத்தில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் கேட்கின்ற பொழுது அதை பேசி ‘சீட்’ கேட்பர்.
நமக்கு நாட்கள் குறைவாக இருக்கிறது. நிமிடம் குறைவாக இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு எழுதி அனுப்ப வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் நிற்பவர்களை அரவணைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கம்பம் மாவட்ட பொறுப்பாளருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த பணிகளை எல்லாம் மற்ற கழக நிர்வாகிகள் மோற்கொள்வார்கள்.
நாம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இன்னும் நாட்கள் குறைவாகவே இருக்கு, நமது பொறுப்பாளர்கள்‌ என்னென்ன பணிகளை கொடுக்கிறார்களே அந்தந்த பணிகளை நிர்வாகிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும். நாம் தீர்க்கமாக செயல்பட்டால் 100க்கு100 சதவீதம் வெற்றியை பெறுவோம்.
நமது மாவட்ட பொறுப்பாளர் பல்வேறு அறிவுறிகளை வழங்கி யுள்ளார். இந்தியாவின் முதன்மையான முதல்வர் அவர்களுக்கு வெற்றியை உரித்தாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் உள்ளிட்ட வடக்கு, தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.