தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கிய கொடையாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்த தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்த விழாவில் கடந்த கொரோன காலங்களில் சிறப்பாக மனித உயிர்களை காப்பாற்றும் வகையில் ரத்ததானம் வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் விருதினை வழங்கி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் சிறப்பித்தார் .

முதலில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த விழாவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் முன்னிலையில் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்வில் கொரனோகாலங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றிய ரத்த கொடையாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி பேசினார் .

மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் ரத்த வங்கி மருத்துவர் பிரியா ,ரத்த வங்கி மேலாளர் அனு மாந்தன், RMo மருத்துவர்கள் ஈஸ்வரன். ராணி, ஜெனிலியா ,துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவபணியாளர்கள் இரத்தக் கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்