தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாநில அளவிலான தீண்டாமை, வன்கொடுமைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், பாதித் கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாநில அளவிலான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் குறித்த 2020- க்கான ஆண்டறிக்கை புத்தக வடிவில் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் மாரியம்மாள், மாவட்ட செயலாளர் முத்து முருகேசன் மற்றும் கண்ணன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.