கோத்தகிரியில் பண்டைய காலத்தி்ல் வாழ்ந்த முன்னோர் களின் வாழ்வியல் முறையை சித்தரிக்கும் பனகுடி வனத்தில் நடுகல் ……
தமிழகத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றி அறியும் ஆதாரங்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகிறது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தி்ல் தான் 7 வகை பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறி்ப்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் .உள்ள பனகுடி கிராமம் குறும்பர் இன பழங்குடிகள் வசிக்கும் இடமாக .உள்ளது.
இந்த கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள காப்பு காடுகளில் பண்டைய நெடுகல்கள் வடிவமைக்கபட்டுள்ளது. அதில் உள்ள கற்களி்ல் வாழ்ந்த முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், செய்த தொழில், உள்ளிட்ட வாழ்வியல் முறைகளை சித்திரமாக செதுக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இடம் தொல்லியல் துறையின் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்படுத்தபட்டு இந்த நடுகல்கள் சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அரிய பட்டு இந்த வரலாற்று சுவடுகள் அழிந்து போகாமல் இருக்க அந்த இடத்தை பாதுகாக்கபட்ட இடமாக அறிவித்து பெயர்பலகைகள் வைத்து பராமரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, நீர்காச்சி மந்து, பொக்காபுரம், கோத்தகிரி போன்ற பகுதிகளில் நடுகல், சுடுமண் சிற்பங்கள், முதுமக்கள் தாலி, பாறை ஓவியங்கள், மற்றும் புதைகுழி கலாச்சாரங்கள் கண்டெடுக்கபட்ட நிலையில் இந்த மாவட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷ பூமியாக திகழ்கிறது.
எனவே இதுபோன்ற காலச்சுவடுகள் அழிந்து போகாமல் இருக்க தொல்லியல்துறை மற்றும் மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாது மாவட்ட மக்களும் தனி அக்கரை கொண்டு பாதுகாக்க சமூக அக்கரையுடன் செயல்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.