• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தேனி: கவர்னருக்கு புகார் மனு அனுப்பிய, சிவசேனா கட்சியினர்

தமிழகத்தில், இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து, தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் கவர்னருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் தொடர்ச்சியாக இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதை உடனே தடுத்து நிறுத்தக்கோரி, தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா, மாவட்ட துணைச் செயலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலையில் புகார் மனு உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி மற்றும் கவர்னர் ஆகியோர்களுக்கு நேற்று (பிப்.,3) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட தபால் அலுவலகம் மூலம் பதிவு தபால்கள் அனுப்பப்பட்டன.