

சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிக்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகளை சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை மாணவ, மாணவிகள் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு நன்றிகளை தெரிவித்தார்கள்.
மேலும் பலருக்கு இது போன்ற நல்ல செயல்களை அந்த சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள் செய்து வருவதால் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.


