• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காதலியை கொன்று சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்..!!

ByA.Tamilselvan

Nov 13, 2022

தன்னை ஏமாற்றிய காதலியை கொன்று சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் குறித்த பரபப்பு சம்பம் வெளியா உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணின் உடலை மீட்டு போலீசார பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலை தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளனர். பின்னர், சிறிது நேரத்திலேயே இந்த கொலையைச் செய்த வாலிபர் அதை வாக்குமூலமாக பதிவிட்ட வீடியோ வைரலானது.


குஜராத்தைச் சேர்ந்த அபிஜித்திற்கும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாள்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், காதலி சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கொலையாளி அபிஜித் தெரிவித்துள்ளார். சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிக்கு தெரியவர ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய அபிஜித் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அங்கு சில்பாவை வரவழைத்த அபிஜித், கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிக்கும் சில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், தன்னை ஏமாற்றியதற்காகத்தான் இந்த கொலையை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.