

வங்கி கணக்கில் பெண் ஒருவர் வெடிகுண்டை டெபாசிட் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் ஒருவர் வங்கிக்குள் கூலாக நுழைந்து வங்கியில் பணம் பெரும் கவுன்டரில் கையெறி குண்டை வீசி வங்கியை வெடிக்க செய்வது போன்ற வீடியோ காட்சிகள் பல நாட்களாக பலரால் மீண்டும் மீண்டும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் அந்த குண்டை வீசுவது ஒரு பெண் என்றும், அந்த வங்கியின் சேவையில் அவருக்கு அசௌகரியம் இருந்ததால் தான் அவர் குண்டை வீசி வங்கியை வெடிக்க செய்ததாகவும் அந்த குறிப்பிட்ட வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதில் அதிகமாக பலரும் அந்த வீடியோவில் இருப்பது ஏமனை சேர்ந்த தீவிரவாதி என்றும், அங்குள்ள ஒரு வங்கியில் அவர் குண்டை போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் என்றும் பகிரப்பட்டுள்ளது. அதே சமயம், பலரும் வேகமான இணைய ரீச்சுக்காக பெண் ஒருவர் குண்டு போட்டு விட்டார் என்று பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ 2022ம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இன்னமும் கூட வைரலில் இருந்து விலகாமல், பொய் செய்தியை தாங்கி கொண்டு பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருவதுதான் வேதனை.
