

ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் தகாத வார்த்தைகளில் பேசியும், கலவரம் செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு குடிகார பெண்மணி.
ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பேருந்திற்குள்ளேயே தகாத வார்த்தைகளால் தன்னுடன் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர் அவரை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆண் பயணிகளை சாந்தி தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.
சாந்தி என்ற இந்த பெண்னும் வெள்ளைவேட்டி சட்டை அணிந்தவரும் கரூர் பேருந்து நிலையத்தில் ஏறியதும், கரூரிலிந்தே குடிபோதையில் சண்டை போட்டுக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனர். நேரம் செல்லச்செல்ல குடிபோதை பெண்ணின் ஆக்ரோசம் அதிகரித்தது.
இதனால் வேறுவழியின்றி வேடசந்தூர் வந்த பேருந்தை, காவல் நிலையத்திற்கு செலுத்துமாறு பயணிகள் அறிவுறுத்தி உள்ளனர். பின்பு ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டினார்.
அங்கு பேருந்திலிருந்து பெண்ணை காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். காவல் நிலையத்திலேயே காவல்துறை முன்பாகவே பெண் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
