• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகம்..,

ByKalamegam Viswanathan

May 8, 2025

தாயின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் உச்ச நிகழ்ச்சியாக மதுரையை ஆளும் மங்கையார் அரசிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் உடன் நாளை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டனர். முருகன் வழிநடிகளும் பக்தர்களின் வரவேற்பை பெற்று நாளை திருக்கல்யாண வைபோகத்திலும் மாலை பூ பல்லாக்கிலும் நாளை மறுநாள் திருத்தேரோட்டத்திலும் பங்கேற்று சனிக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் கோவிலிலில் விடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் திருப்பரங்குன்றம் வந்தடைகிறார்.

முருகன் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்படும் போதும் மீண்டும் திரும்பும் போதும் வழி நெடியிலும் பக்தர்கள் அவருக்கு வரவேற்ப்பளித்தனர்.