• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திரௌபதை அம்மன் திருக்கல்யாண வைபவம்..,

ByKalamegam Viswanathan

May 1, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில் அலங்காரம் செய்தனர்.

இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி,ஜவஹர்லால்,குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்துதிருமணத்தை நடத்தி வைத்தனர்.அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே.முருகேசன்,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், செல்வராணிஜெயராமச்சந்திரன், நிஷா கௌதமன், கோவில் பணியாளர் கவிதா, மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதிஉலா நடந்தது. உபயதார் சிவஞானம் பிள்ளை குமாரர் அய்யப்பன் பிரசாதம் வழங்கினார். இன்று மாலை சக்கர வியூககோட்டை சைந்தவன் வதம், நாளை வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.