காவேரி வைகை குண்டாறு உகரநீர் திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதை ஒட்டி அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை அருகே புரகாரப் பண்ணை கிராமத்தின் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கான தண்ணீர் செல்லும் வாய்க்கால் வெட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அளவீடு செய்யும் பணியை இரண்டாவது முறையாக கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர் வாய்க்கால் வெட்டி செல்வதற்கு அரசாங்கத்தில் இடமே போதுமான இடங்கள் இருக்கும் பட்சத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக புரஹர பண்ணை கிராமத்தின் வழியாக வாய்க்கால் வெட்டுவதை தாங்கள் ஏற்க முடியாது.

தமிழ்நாடு கண்மாய் வழியாக வாய்க்கால் செல்வதாக அறிவிப்பு வெளியான பிறகு தேவையில்லாமல் அரசு இந்த பணியை செய்து வருவதாகவும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் வருவாய் துறை நீர் பாசன துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் கிராம மக்களின் எதிர்ப்பை எடுத்து அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் தங்களுடைய அலுவலகத்திற்கு திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.