• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனுஷ்காவின் சொத்து மதிப்பு

Byமதி

Dec 18, 2021

தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியா நடித்து வரும் ஹீரோயின் அனுஷ்கா. யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானர். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். இந்த நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் அனுஷ்காவுக்கு பல சொகுசு பங்களா வீடுகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவ அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளும் வழங்கி வருகிறார். அனுஷ்காவின் தற்போதைய மாத வருவாயை கணக்கிடும்போது அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு இன்னும் கூடும் என்கின்றனர்.