• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜி20 மாநாட்டின் கருப்பொருள்..!

Byவிஷா

Sep 9, 2023
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்கிற கருப்பொருள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
டெல்லியில் இன்று ஜி20 மாநாடு தொடங்கி உள்ள நிலையில், இந்த மாநாட்டின் கருப்பொருள் கவனம் ஈர்த்துள்ளளது. இந்த மாநாட்டில் புவி வெப்பமயமாதல், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஒரே பூமியாக ஒருங்கிணைந்து பசுமை முன்முயற்சிகளை விரைவாக செயலபடுத்துவது, ஒரே குடும்பமாக இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் ஒரே எதிர்காலத்தை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது ஆகிய அம்சங்கள் குறித்து ஜி20 தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்தியாவின் ஜி20 தலைமைக்கான கருப்பொருள் 'வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' ஆகும். இந்த கருப்பொருள்,  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய செயல்திட்டம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைத்து தலைவர்களையும் வரவேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, "இந்தியாவின் வசுதைவ குடும்பகம் எனப்படும் இம்மாநாட்டிற்கான கருப்பொருள், உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், இந்த தொலைநோக்கை நனவாக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.