• Fri. May 3rd, 2024

டிஜிட்டில் முறையில் நெல்கொள்முதல் செய்ய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!

Byவிஷா

Sep 8, 2023

தமிழக அரசின் நுகர்வோர் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. எதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நிலையத்தில் தினமும் சராசரியாக 400 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆனால் எடை போடுவதில் ஊழியர்கள் பலரும் முறைகேடு செய்கின்றனர். இந்த முறைகேட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் முறையில் நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி விவசாயிகள் நெல்லை பையில் அடைக்காமல் டிராக்டரில் எடுத்து வரலாம். அந்த டிராக்டர் கன்வேயர் பெல்ட் வாயில் இணைக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு 20 டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக தஞ்சை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை டிஜிட்டல் முறையில் நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை செயல்படுத்த வாணிப கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த புதிய முறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *