நாட்டில் உள்ள அனைத்து வகையான பயண போக்குவரத்துகளுக்குமான கட்டணத்தை ஒரே கார்டு மூலம் எளிதாக செலுத்தும் வகையில், இந்தியாவில் முதன் முதலாக டிரான்ஸிட் கார்டை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் முதல் டிரான்ஸிட் கார்டை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து வகையான பயண போக்குவரத்துகளுக்கு மான கட்டணத்தை ஒரே கார்டு மூலம் எளிதாக செலுத்த முடியும். இந்தத் திட்டத்தின் மூலமாக இந்திய நாட்டின் மக்களை தவிர்த்து வெளிநாட்டு பயணிகளும் பலன் பெற முடியும். இதை தவிர சில்லறை விற்பனைக்கான கட்டணங்களையும் இதன் மூலம் செலுத்த முடியும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் அசத்தல் அறிவிப்பு..!
