குமரி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில்.அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த (ஏப்ரல்_6)ம் தோதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில், அந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பள்ளி தேர்வு அறையில் பல மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில். தேர்வு மையத்தின் கடைசி வரியில் தேர்வு எழுதிய பகுதியின் பின் பக்கம் இருந்த பகுதி மற்றும் ஏனைய பகுதியில் நடந்த வாறு கண்காணிப்பில் இருந்த வேலவன் கடைசி பெஞ்சில் இருந்த மூன்று மாணவிகளில் ஒருவரை தொட்டு பேசி கேள்விகளில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என அந்த மாணவியின் முதுகை தொட்ட வண்ணம் கேட்க அதனை முதலில் சாதாரணமாக கருதிய அந்த மாணவி.அதன்பின் ஆசிரியர் குறிப்பிட்ட மாணவியின் இரண்டு தோள் பகுதியில் கையை வைத்த வண்ணம் சம்பந்தப்பட்ட மாணவியின் உடலில் சாய்ந்த வண்ணம் நின்றது குறிப்பிட்ட மாணவிக்கு முறையாக தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்ட போதும்.
பொறுமை காத்து.தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் ஆசிரியரின் சீண்டலை குறித்து தெரிவித்தார். பெற்றோர்கள் உடனே சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இடம் புகார் தெரிவித்ததுடன்.தேர்வு மையத்தில் இருந்தே. தக்கலை மற்றும் குழித்துறை வட்டார கல்வி அதிகாரிகள் மட்டும் அல்லாது நாகர்கோவிலில் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வேலனின் அனாகரீக செயல் குறித்து வாய் மொழி புகாருடன்.தேர்வு மைய அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
குழித்துறை மகளிர் காவல் நிலையம் மாணவியின் பெற்றோர் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு.சம்பந்தபட்ட ஆசிரியர் வேலனை கைது செய்தனர்.இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தி திடமும் தெரிவித்தனர்.
தேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் வேலனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குமரியின் மூன்று கல்வி மாவட்ட பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.