ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 15615 குடிநீர் இணைப்புகள் இருக்கிறது. வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 1200 ரூபாயும், வணிகம் சார்ந்த குடிநீர் இணைப்புகளுக்கு 3600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 78% வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் வரி வசூல் பிப்ரவரி 15க்குள் நூறு சதவீதம் வசூல் செய்ய நகர்மன்ற தலைவர் தங்கம், ரவி, கண்ணன், ஆணையாளர் பிச்சைமணி ஆகியோர் நகராட்சி ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
