• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில்‌ மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்

Byதரணி

Jun 7, 2023

நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின்‌ மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அனுப்பி வைத்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்தோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருப்பினும் கைக்குழந்தையை வைத்திருந்த பெண்ணை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஹர்ஷ் சிங் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து பரிவுடன் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக காவல்துறை வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.