

முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, உண்டியலை திருட வேண்டும் என்பதுதான் மதுரையில் எச் .ராஜா பேட்டி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: எச்.ராஜா பேட்டி.:
12-2-2018 ஆம் ஆண்டு மதுரை பென்ச் திருப்பியும் அதன் பிறகு 07-06-2021 சூமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதன்படி கோவில் நிலங்களை எந்த பொது காரியத்திற்கும் விற்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் என்றாலும் கூட இதை விட அதிக உறுப்பினர்கள் இருக்கும் பெஞ்ச் தான் மாற்ற முடியும்.
மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளைக்கு எதிராக உள்ள இடத்தை வாகன நிறுத்தத்திற்கு ஒத்திக்கு வேண்டும் என்று கோரப்படுகிறது. ஆனால் அறநிலையத்துறை சார்பாக அந்த இடத்தை நீதிமன்றத்திற்கே விற்க்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அல்லேலூயா பாபு கும்பல் உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றத்திற்கு கோவில் நிலத்தை விற்று விட்டால், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நிலங்களையும் கொடுத்து விடலாம், முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, உண்டியலை திருட வேண்டும் என்பதுதான். அதற்கு தடையாக இருப்பது சூ மோட்டோ வழக்கு, அதனால் தந்திரமாக கையாளுகிறார்கள், எனவே நீதிமன்றம் அதை புரிந்து கொண்டு அறநிலையத்துறைக்கு ஒரு நிலத்தையும் விற்பதற்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், இந்து கோவில் சொத்துக்களை விற்றால் போராட்டம் நடக்கும்,
மசூதி, சர்ச் சொத்துக்களை விற்க முடியுமா. ஏற்கனவே உயர் நீதிமன்றத்திற்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது, எனவே அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை என்பது எனது கருத்து.
ஒரிசா ரயில் விபத்து விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது சதி வேலை என்று குறிப்பிடப்படுகிறது என்ற கேள்விக்கு:
சதி வேலைக்கு வாய்ப்புள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவாக உள்ளார் என்று தெரிகிறது. தொழில்நுட்பத் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை, வேண்டுமென்றே யாராவது திருப்பி விட்டு இருந்தால் தான் நடக்கும், ஏனென்றால் அர்பன் நக்சல் இங்கு டயரை வைத்து ரயிலை தவிர்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு முயற்சி ஏற்பட்டது, எனவே இந்தியாவில் அர்பன் எக்ஸெல் பல இடத்தில் இருப்பதால், இது சதித்திட்டமாக இருக்கலாம், சிபிஐ விசாரணை அறிக்கைக்கு பிறகு உறுதிப்படுத்த முடியும்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:
திருமாவளவன் எனும் தீய சக்தி யார், 22 பேர் விஷ சாராய வழக்கில் இறந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்காத வாய் இந்த விவகாரத்தில் திறக்கக் கூடாது. டெல்லியில் இருந்து தென் மாவட்டங்களை கொளுத்துவேன் என்று சொன்ன தீய சக்தி தானே, இந்து சமுதாயத்தில் உள்ள அனைத்து நபர்களையும் இழிவுபடுத்தி பேசியவர் தானே, ஷட்அப், வாயை திறக்க அவருக்கு உரிமை இல்லை, இந்தியாவில் என்ஐஏ வின் செயல்பாடுகள் 94 சதவீதம் வெற்றியை பெற்றுள்ள நிலையில், மதுரையில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர், அதில் ஒரு சிலர் வழக்கறிஞர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் பிஎஃப்ஐ அமைப்பைச் சார்ந்தவர்கள், எனவே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி உயர்கல்வியாக இருந்தாலும் அமைச்சர் பொன்முடி உயர்ந்தவரா என்று தெரியவில்லை, ஆளுநர் இவ்வளவு பெரிய மாளிகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார், ஆர்.என்.ரவிக்கு என தனியாக மாளிகை கட்டப்பட்டுள்ளதா, இதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் குச்சி வீட்டில் இருந்தார்களா. அப்போது ஏன்டா எவனும் பேசவில்லை, பேசிய அனைவரையும் கேட்கிறேன், இப்போது ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆதங்கம் எதற்கு, ஆளுநர் துணைவேந்தர்களுடன் பேசுகிறார், சாலையில் செல்பவர்களுடன் பேசவில்லை, பொன்முடியை களோக்கியலில் சொன்னால் என்னாகும் என்று தெரியவில்லை, அவர்களுடன் பேசவில்லை படித்தவர்களுடன் பேசுகிறார். அப்படி பேசும்போது பொருளாதாரம் பற்றி பேசுகிறார், சீனாவில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள், எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் வீணாக நேரில் சென்று அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு முதல்வர் கூட ஒன்றும் சொல்லவில்லை, இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். அதனால் வைகோ போன்றிருக்கும் அரை வேக்காடுகள் எல்லாம் வாயை மூடி இருப்பது நல்லது என்றார்.
- பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று (செப்.,28) … Read more
- ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் … Read more
- ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் … Read more
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு … Read more
- குற்றவழக்குகளில் தொடர்புடையவருக்கு பா.ஜ.க.வில் பதவி..!இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி … Read more
- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வாச்சாத்தி … Read more
- ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் … Read more
- குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்..!அதிமுகவில் குமரி கிழக்கு மாவட்டச் செயலளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலையில் ஒன்றுபட்ட குமரி … Read more
- சிவகாசி அருகே, பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து..!விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் … Read more
- திருப்பங்கள் தந்திடும் திருப்பாம்பரம் கோயிலில் இராகு,கேது பெயர்ச்சி !அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும்இந்த எட்டு … Read more
- நற்றிணைப் பாடல் 260:கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று … Read more
- சிந்தனைத்துளிகள்உலகில் இருக்கக் கூடிய பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.எந்தப் பழம் அதிகச் சுவையுடையது, … Read more
- பொது அறிவு வினா விடைகள்ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP). இந்தோசீனா போர் 1946 – ஏப்ரல் 1975 க்கு … Read more
- குறள் 537:அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். பொருள் (மு.வ): மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) … Read more
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more
