• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்..!

ByA.Tamilselvan

Aug 31, 2022

குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.