• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இந்த படத்தோட காப்பியா வலிமை? என்னய்யா சொல்றீங்க?

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல், முதல் வாரத்தில் இருந்த தற்போது கொஞ்சம், கொஞ்சமாக குறைவதாக கூறப்படுகிறது!

ஏற்கனவே மெட்ரோ மற்றும் வால்டர் வெற்றிவேல் படங்களின் காப்பி தான் வலிமை என ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது ஜாக்கி சான் படக் காட்சியை அப்படியே அப்பட்டமாக இயக்குநர் எச். வினோத் வைத்திருப்பதையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஜாக்கி சான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் ஜாக்கி சான் ஆட்களை அந்தரத்தில் கட்டி வைத்து வில்லன் மிரட்டுவார். அதே காட்சியை அப்படியே ஆட்டையை போட்டு இயக்குநர் வினோத் வலிமை படத்தில் வைத்திருக்கிறார் என வீடியோவுடன் கம்பேர் செய்து பங்கம் பண்ணியுள்ளனர்.