இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல்.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
காலக் கரையான்களால் செல்லரிக்க முடியாத பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா அசத்தும் ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார் என கூறுகிறார் இயக்குநர் ஆதிராஜன்
கவிஞர் பழநிபாரதி எழுதிய “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார்.
கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், “வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை” என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார். “வெச்சேன் நான் முரட்டு ஆசை…” பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார். “அழகான இசை ஒன்று ….” என்ற பாடலை கார்த்திக் – அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது.
இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார் எனக் கூறிய படத்தின் இயக்குநர் ஆதி ராஜன் மேலும்கூறும்போது,
“இசைஞானியுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விடவேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.
பாடல் கம்போஸிங்கின் போது நான் பயந்து கொண்டே இருந்தேன்.ஆனால் இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு… தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து “இதயமே இதயமே இதயமே…. உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே” என்ற என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடலை யுவன்ஷங்கர்ராஜாபாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன்.
அவரும் உடனே யுவனை
அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார். இருபத்தைந்து வருடங்களில் 150 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா 1989ல் “தென்றல் சுடும்”என்ற படத்திலிருந்து பாடி வருகிறார்.இதுவரை 150 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். சமீப காலங்களில் அவர் பாடிய என் காதல் சொல்ல தேவையில்லை, காதல் ஆசை யாரை விட்டதோ, விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் அந்த கண்ண பார்த்தாக்கா, அஜித்குமாரின் “வலிமை” படத்தில் இடம் பெற்ற “நாங்க வேற மாதிரி…” உள்ளிட்ட பல பாடல்கள் யூடியூபில் 47 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
அந்தளவு யுவனின் குரலுக்கு இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் சக்தி இருக்கிறது.
இசைஞானியின் இசையில் பல பாடல்களை யுவன்சங்கர் ராஜா பாடியிருந்தாலும் இளையராஜா எழுதிய ஒரு பாடலை யுவன் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஜன், சினாமிகா நடனமாடும் இப்பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வடிவமைக்கிறார். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.” என்று இயக்குநர் ஆதிராஜன் குறிப்பிட்டார்.



- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]