• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தூங்கிக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம்..,

ByKalamegam Viswanathan

Feb 8, 2026

மதுரை மாநகரில் பிரதான பகுதியான பெரியார் பேருந்து நிலையம் திருமங்கலம் திருப்புவனம் சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்கு தூசி படர்ந்து சாலையானது காணப்படுகிறது.

சாலை பராமரிப்புக்காக பல மாதங்களாக வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் தமிழக அரசால் பராமரிக்கப்படும் தமிழ்நாடு ஹோட்டல் அருகே இது இருப்பதாலும் மேலும் பல உணவகங்கள் குடியிருப்புகள் உள்ளிட்டவர்கள் இருப்பதாலும் வீடு முழுவதும் தூசி அதாவது புழுதியானது காணப்படுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் மற்றும் குடியிருப்பு வாசிகளும் கடும் அவதைக்கு உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

சுமார் 200 மீட்டர் சாலை அமைப்பதற்கு பல மாதங்களாக இழுத்து அடிப்பதாகவும் இதனால் நுரையீரல் மற்றும் சுவாச மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உடனடியாக தூங்கிக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை அமைத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்.