தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக தற்போது இறையன்பு செயல்பட்டு வருகிறார். அவரசு செயல்பாடுகள் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில் பணியாற்றி இருக்கிறார்.இவர் சிறந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட. 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். நல்ல பேச்சாளரும் கூட..
இந்த நிலையில்தான் தமிழ்நாடு வளர்ச்சி துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் சிறந்த புத்தகங்களுக்கான பரிசுக்கு இவருடைய புத்தகம் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018ல் வெளியான நூல்கள் போட்டிக்கு அழைக்கப்பட்டு, அதற்கு பரிசுகள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.
இந்த புத்தக விழாவில் மூளைக்குள் சுற்றுலா என்ற இறையன்பு எழுதிய புத்தகமும் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதுஇன்னும் சில புத்தகங்கள் பரிசுக்கு தேர்வாகி உள்ள நிலையில் இறையன்பு எழுதிய புத்தகமும் பரிசுக்கு தேர்வாகி இருக்கிறது. ஆனால் அவர் தலைமை செயலாளராக இருக்கும் போது தமிழ்நாடு அரசின் ஒரு துறை பரிசு வழங்குவது சரியாக இருக்காது.
எனகூறி இந்த பரிசை ஏற்க மறுத்து இருக்கிறார். தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு இது தொடர்பாக இறையன்பு கடிதத்தில். 2018ல் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான் எழுதிய மூளைக்குள் சுற்றுலா புத்தகமும் தேர்வாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 2021ல் புத்தகம் இதற்கு தேர்வு செய்யப்பட்டாலும், இப்போது நான் தலைமை செயலாளராக இருக்கும் போது பரிசை பெறுவது ஏற்புடையதாக இருக்காது. அதனால் எனக்கு வழங்கப்படும் பரிசை தவிர்த்துவிடுங்கள் என்று இறையன்பு கடிதம் எழுதி இருக்கிறார். தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் அதிகாரிகள் இடையே கவனம் பெற்றுள்ளது.