• Fri. Feb 14th, 2025

கோலோ கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பள்ளி..!

ByKalamegam Viswanathan

Aug 8, 2023

மதுரை பள்ளிகளுக்கு இடையேயான கோலோ கிரிக்கெட் போட்டி, சமயநல்லூர் நல்லமணி மெட்ரிக் பள்ளி அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
திண்டுக்கல் நாகா புட் லிமிடெட் நடத்திய கோலோ கிரிக்கெட் டோர்னமெண்ட் 2023 போட்டிகள், மதுரை செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற போட்டியை, திண்டுக்கல் நாகா புட் லிமிடட் நிறுவன சி.இ.ஓ., மோகன கண்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில், மதுரையைச் சேர்ந்த 16 பள்ளிகளில் இருந்து அணிகள் பங்கு பெற்றன. பல சுற்றுக்களுக்குப் பின், இறுதிப் போட்டியில் விளையாடிய சமயநல்லூர் நல்லமணி மெட்ரிகுலேஷன் பள்ளி அணி, மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளி அணியை வென்றது.
சாம்பியன்சிப் பட்டம் வென்ற இந்த  அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கும் சிறப்பு விருந்தினர் ராதாகிருஷ்ணன், செந்தாமரை கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார், நாகா புட் லிமிடெட் மேனேஜர் ஆறுமுகம் ஆகியோர் சுழற் கோப்பையுடன், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினர்.   போட்டி ஏற்பாடுகளை யாதவா கல்லூரி பேராசிரியர் பாண்டி குமார் மற்றும் செந்தாமரை கல்லூரி உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் முனைவர் கவிக்குமார் மற்றும் ஜெயத்தங்கம் செய்திருந்தனர்.