இந்தியாவில் பணிவீக்கம் அதிகரித்துவருகிறது. விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெட்ரோல்,டீசல் ,மற்றும் சிலண்டர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் மாதசம்பளம் பெறும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\மேலும் பக்கத்து நாடுகளான இலங்கை ,பாகிஸ்தான் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வு வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்ரோ வட்டி விகிதம் 0.5 % உயர்த்தி 4.90% ஆக ஆதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் சற்று முன் அறிவித்துள்ளார்.ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டுக்கடன்,வாகன கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் . இதனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் பாதிக்கப்பட்ட வுள்ளனர்.
மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ரிசர் வங்கி
