பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, கடந்த வாரம் ஊடக விவாத நிகழ்ச்சியில், இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான், வளைகுடா நாடுகள் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல், இத்தகைய கருத்துக்கு இந்தியா பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்திவருகின்றன. நுபுர் சர்மா பதவி பறிக்கபட்டுள்ள நிலையில் அவர் தனது கருத்து விளமளிக்க சம்மன் அனுப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல வளைகுடா நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இந்திய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நுபுர் சர்மாவின் கருத்தால் அரபு நாடுகளுடனான உறவில் விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தனது நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு -பாஜக நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு
