• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் வரும் 3ஆம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் ரயில்வே கேட்

ByP.Thangapandi

Mar 28, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள மதுரை போடி அகல இரயில்பாதைக்காக இரயில்வே கேட் உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது.

இந்த இரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வரும் 03.04.2024 இரவு 11 மணி முதல் 04.04.2024 அதிகாலை 5 மணி வரை என சுமார் 6 மணி நேரம் இந்த இரயில்வே கேட் மூடப்படும் என தென்னக இரயில்வேயின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு வழியாக திருச்சி மற்றும் கோவை செல்லும் வாகனங்களும், வத்தலக்குண்டு-ல் இருந்து உசிலம்பட்டி வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்களும் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி உசிலம்பட்டியிலிருந்து சில்லாம்பட்டி வழியாக மேக்கிலார்பட்டி, வத்தலக்குண்டு ரோட்டிற்கு செல்லவும், இதே பாதையில் வத்தலக்குண்டு-ல் இருந்து வரும் வாகனங்களும் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.