• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மழையில் குடைபிடித்தபடி வாக்களித்த பொதுமக்கள்…

Byகாயத்ரி

Feb 19, 2022

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தப்போதும், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து வருகின்றனர். திருவாரூரில் காலை முதல் மழை பெய்து வருவதால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மழையில் நனையாதப்படி வாக்காளர்களை நிற்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அதிகமானோர் வந்ததால், அவர்கள் தாங்கள் கையோடு எடுத்துவந்திருந்த குடையை பிடித்தவாறு வாக்களிக்க காத்திருந்தனர்.