

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில்திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் பொன்முடி வாக்களித்தார்.திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் வாக்களித்தார்.வேலூர் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தனது வாக்கை பதிவு செய்தார்.
