• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ByA.Tamilselvan

Jun 30, 2022

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மாலை 6 மணிக்குவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..
ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து டிஎஸ்-இஓ என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்வெளியில் ஏவப்பட்டது.
இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்கள் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.. இதில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.
இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. இது 2.8 கிலோ எடை கொண்டது.அனைத்துசெயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது.