• Thu. Apr 25th, 2024

செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

மாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி சொன்ன காவல் ஆய்வாளர் (பூமி) நாதன்
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திடீரென எல்லிஸ் நகர் 70 அடி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்,


பேச்சுவார்த்தையின் போது தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வரி பாக்கி நிலுவையில் வைத்ததாகவும், இதனை கட்ட மறுத்து மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களை தூண்டிவிட்டு சாலை மறியலில் ஈடுபடுத்தியது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் செவிலியர்களிடம் பொது மக்களுக்கு இடையூறு விலையுவித்தமைக்காக மறியல் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்ததும் செவிலியர்கள் செய்வதறியாமல் தங்களது போராட்டத்தை உடனே வாபஸ் செய்து மருத்துவமனைக்குள் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் செவிலியர்களுக்கு உங்களுக்கு ஏதும் பிரச்சனையா இது நிர்வாக பிரச்சனை நிர்வாகம் மாநகராட்சியும் பேசக்கூடிய பிரச்சனை நீங்கள் தலையிடக் கூடாது உங்களுக்கு பிரச்சனை என்றால் சொல்லுங்கள் நானே கூட உங்களுக்கு துணை நிற்கிறேன் என்று நீங்கள் மருத்துவத்துறையில் இருக்கிறீர்கள் சாலை மறியல் செய்தால் அவசர கால ஊர்தி ஏதேனும் வந்தால் உங்கள் மறியலால் பாதிக்கப்படும் அல்லவா செவிலியர்களுக்கு புத்தி சொன்ன காவல் ஆய்வாளர் பூமிநாதன்
தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை ஏமாற்றும் வகையில் தன்னிடம் பணியாற்றும் செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபட செய்த தனியார் மருத்துவமனை செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *