

மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பேட்டரியால் இயங்கக்கூடிய சைக்கிள் மர்ம நபரால் திருடப்பட்டது என மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணேசன் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா-வில் சைக்கிளை மர்ம நபர் திருடிச் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணேசன் வீட்டின் முன் இருந்த சைக்கிளை திருடி சென்றது தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த செய்யது அபுதாஹீர் (வயது 31) என்பது தெரியவர அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
