

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள் பங்குபெற்று பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் மற்றும் இந்நிகழ்வில் மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி மாணவர்கள் 150 நபர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.
