• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் கொடுத்த கவிஞர்…

Byகாயத்ரி

Jun 22, 2022

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் எழுதிய கவிஞர். 7 வருடங்களுக்கு பின் பிரபலமாகும் பதிவு.

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட முன்னனி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார். முதன்முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். இந்நிலையில் நயன்தாராவின் பெயருக்கு இதுதான் அர்த்தம் என கவிஞர் ஒருவர் ஏழு வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நயனம் என்றால் “கண்” தாரா என்றால் “நட்சத்திரம்”. விண்மீன் என்பதும்கூட கவிதை பண்புள்ள உருவக பெயர்தான். உடுமலை என்ற ஊர் பெயரை ஆராய்ந்தபோது உடு என்பது நட்சத்திரத்தை குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரை தமிழ்ப்படுத்தினால் உடுக்கண்ணி என்று ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.