புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள அம்மாசத்திரம் கிராமத்தின் அருகே உள்ள திருச்சி புதுக்கோட்டைதேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி ரக சிறிய விமானம் எட்வொர்க் கம்பெனியின் பயிற்சி விமானம் சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு சென்று வரும் வழியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டன.

இந்த விமானத்தை ஓட்டியவர் ராகுல் பயிற்சியாளர் ரசூல் இந்த விமானத்தின் முன் பகுதி இறக்கை ஒடிந்த நிலையில் இருந்தன இன்ஜினில் உள்ள பாகங்கள் சிதைந்து இருந்தன. இதனை இந்த ஊரை சுற்றியுள்ள கிராமத்து பெருமக்கள் உடனே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர் விமானம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாய்ந்த நிலையில் உள்ளனர்.

உடனே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத் துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அவர்கள் திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர் இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)