
குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை உணவகமாக மாற்றி திறக்கப்பட்டுள்ளது. நிஜ விமானத்தில் பறப்பது போன்ற உணர்வையும், பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியின் மற்றும் தாய் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் கிடைக்கும் என இதன் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ் 320 ரக விமானத்தை வாங்கி வந்து இந்த உணவகத்தை உருவாக்கியதாக அதன் உரிமையாளர் முகி தெரிவித்துள்ளார்.
விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் வதோதராவுக்கு கொண்டு வரப்பட்டு, அது உணவகமாக மாற்றி அமைக்கப்பட்டதாகவும், இந்த விமான உணவகத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிட்டியுள்ளதாக முகி தெரிவித்துள்ளார்.