வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ளது தியாகராஜர் பொறியியல் கல்லூரி. தமிழகத்தில் தலைசிறந்த கல்லூரியான தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இன்று 59வது ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் அறங்காவலரும் கவர்னிங் கவுன்சில் உறுப்பினருமான ஹரிதியாகராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் அருண்பிரேம் விளையாட்டு நிகழ்வுகளின் ஆண்டு அறிக்கையை வழங்கினார். மேலும் கல்லூரியின் முதல்வர் பழனிநாதராஜா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கல்லூரி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் மேலும், குறிப்பாக என்னுடைய தந்தை தான் என்னுடைய பயிற்சியாளர் நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்களும் நிர்வாகமும் கொடுத்த ஊக்கமே தனது சாதனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறினார் விளையாட்டு என்பது ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் எந்த பிரச்சனைக்கும் நல்ல தீர்வு எடுக்கும் திறனையும் வளர்க்கும் என்று பேசினார். மேலும் பேசியவர் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம். மாணவர்கள் போட்டியாளர்கள் அனைவரையும் தனக்கு நிகராக நடத்த வேண்டும் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறாத பார்வை இருக்கும் என்றார்.மேலும், வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் அச்சந்தா சரத் கமல் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.கௌரவ விருந்தினர் அறங்காவலர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.