பல்லடம் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் 70. இவர் காரணம்பேட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வெகு நேரமாகியும் கண்ணம்மாள் வீட்டிலிருந்து வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர் அப்போது முகத்தில் துணி சுற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் பல்லடம் காவல் ஆய்வாளர்களின் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை துவங்கினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இது குறித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படை அமைத்து போலீசார் மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.