• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் புதிய மடாதிபதி..,

ByKalamegam Viswanathan

Apr 30, 2025

ஆதிசங்கர பரம்பாரகத மூலாம்னாய ஸர்வஜ்ஞபீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் சர்மா கணபாடிகள் என்ற 20 வயது உடையவரை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று காலை முதல் வேத பாராயணங்கள் முழங்க உரைப்படி சன்யாசம் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள் கலந்து மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டனர்.

சரியாக காலை ஏழு மணி அளவில் சன்னியாசம் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது கணேச சர்மா ராவிட் என்ற பெயரை சன்னியாசம் பெற்ற பிறகு ஸ்ரீ சத்திய சந்திரசேகர சுவாமிகள் என பட்டம் சுற்றப்பட்டு 71ஆவது மடாதிபதியாக பக்தர்கள் ஸ்ரீ சத்திய சந்திரசேகர சுவாமிகளிடம் ஆசி வழங்கினார்.