• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொழிலதிபரின் மனைவியை அச்சுறுத்தும் மர்ம நபர் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சேலத்தில் ரியல் எஸ்டேட் செய்து வரும் தொழிலதிபரின் மனைவி காரை வழிமறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் என்று புகார் அளித்தார்.

சேலம் அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தகர் அணி மாநில துணை செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி உஷாராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் உஷாராணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று காவல்துறை அதிகாரியிடம் கொடுத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அந்த தொகையை நான் சிறிது சிறிதாக கட்டி வருகிறேன். கடந்த ஒரு மாத காலமாக எனது காரை பின்தொடர்ந்து வந்து கண்காணிக்கின்றனர். வண்டி முன்பாகச் சென்று நிறுத்துகின்றனர். நான் வீட்டில் இருக்கும் போதும் வெளியே இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வருகின்றனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. அதனால் எனக்கு வெளியே செல்ல பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.