காரைக்கால் நகரப்பகுதியில் வசித்து வரும் அப்துல் பாசித் என்பவர் வளர்த்து வந்த 5ஆட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்துக்கொன்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய் கடித்து இறந்த ஆட்டுக்குட்டிகளை எடுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பாக போட்டு நீதி கேட்டு போராடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இறந்துபோன தனது ஆட்டுக்குட்டிகளுக்கு புதுச்சேரி அரசு இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அப்துல் பாசித்

தங்கள் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கும் அங்குள்ள ஸ்கேன் சென்டருக்கு வருவோருக்கும் தெரு நாய்களால் ஆபத்து உள்ளதாக கூறினார்.
5 ஆட்டுக்குட்டிகளை தெருநாய்கள் கடித்து கொன்றுள்ள நிலையில், தெருநாய்களை காப்பத்தில் அடைத்து பாதுக்காக்கவேண்டுமன சமூக ஆர்வலர் சூர்யா புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளார்.








