• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டம்!..

Byமதி

Oct 5, 2021

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காணெளி வாயிலாக நடைபெற்ற மாநில செயற்குழு முடிவில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கைகள், கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை தொடர்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தம் உள்ளிட்ட சிரமங்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்திடவும், பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுப்பு வழங்க வலியுறுத்தியும் எதிர்வரும் 7ஆம் தேதி வியாழன் அன்று தமிழகம் முழுவதுமுள்ள வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்சி அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

புதிய அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சமீப காலமாக அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் MEDI ASST நிறுவனம் 20 மாவட்டங்களின் Third party administrator ஆக பொறுப்பேற்ற பின்னர் எழுந்துள்ள பிரச்சனைகளை களையக் கோரியும், MEDI ASST நிறுவனத்தை Third party administrator-ஆக நியமணம் செய்ததை இரத்து செய்யக் கோரியும்,Pakage முறையை முற்றிலும் இரத்து செய்து விட்டு Caseless Treatmentஐ உறுதிப்படுத்திடக் கோரியும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து, அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் வரும் 21ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்துவது என மூன்று போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் மாதத்தின் எஞ்சிய நாட்கள் முழுவதும், ஜூன் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய DAவை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி, வட்ட/மாவட்ட / மாநில நிர்வாகிகள் மாநிலம் தழுவிய தீவிர பிரச்சார இயக்கங்கள் நடத்துவது மற்றும் வட்ட/மாவட்ட கோரிக்கை கருத்தரங்கள் நடத்துவதென்றும்,மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து முடிவாக டிசம்பர் 4 ஆம் தேதியன்று திருச்சியில் மாநில மாநாட்டினை நடத்துவது என பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.