• Thu. Dec 12th, 2024

வேடிக்கைப் பார்க்கும் மோடி அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!..

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் காங்கிரஸ்சார் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாரளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ்சார் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசங்கத்தை எதிர்த்து கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.