• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,

ByK Kaliraj

Jul 23, 2026

தமிழக முதல்வர் ஜோசப்விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன். திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் சாத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஜனநாயகம் வெளியாகும்.

தனலட்சுமி திரையரங்கில் எந்தவித கொண்டாட்டமும் இன்றி வெறிச்சோடி காணப்படுவது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மத்திய மாவட்ட இணைச் செயலாளர் அஜித்-க்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் திரையரங்கில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சின்னப்பர் தரப்பில் வைத்தால் அஜித் தரப்பினர் பிளக்ஸ் அகற்றுவதாகவும் அஜித் தரப்பில் பேனர் வைத்தால் அதனை சின்னப்பர் தரப்பினர் அகற்றுவோம் என மாறி மாறி பிரச்சனை செய்து கொண்டதால் காவல்துறையினர் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக திரையரங்கில் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. உட்கட்சி பிரச்சனை ஜனநாயகம் திரைப்பட வெளியீட்டிலும் எதிரொலித்துள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.