• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகன் கண் முன்னே தாய் சம்பவ இடத்திலேயே பலி

ByKalamegam Viswanathan

Oct 10, 2024

அதிவேகமாக சென்ற பைக் சாலையை கடக்க முயன்ற மகன் கண் முன்னே பைக் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலை பகுதியை சேர்ந்த செல்வி வயது 69. இவர் எல்லிஸ் நகர் 70 அடி சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே சாலையில் நடக்கும் போது அதிவேகமாக வந்த பைக் மூதாட்டி மீது மோதியது. 20 அடி தூரம் இழுத்துச் சென்று பின் பைக் நின்றது. அப்பொழுது எதிர் திசையில் சாலையில் அவரது மகன் கார்த்திக் அமர்ந்திருந்தார். தாய் பைக் மோதுகிறதே கண்டவுடன் பதறிப்போய் தாயை ஓரமாக உட்கார வைத்து 108 அவசரகால ஊர்திக்கு தகவல் கொடுத்து, பைக் ஓட்டிய நபரை பிடித்து வைத்திருந்தார். 108 ஆம்புலன்ஸ் செவிலியர் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என தகவல் தெரிவித்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் இருந்து தப்பி ஓடி விட்டான். தகவல் அறிந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் காசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தப்பி ஓடிய நபரை பிடிக்க முயன்றனர். எனினும் அவன் தப்பி ஓடி விட்டான். சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பிரேத சோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய நபரை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தாய் இறந்தது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.