வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி வெட்டுவாணம் கிராமத்தில் நன்றி அறிவிப்பு மற்றும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு தன்னை வெற்றி பெற செய்ய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். அவருடன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் குமாரபாண்டியன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன் பேரூராட்சி செயலாளர் செல்வம் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜாகீர் உசேன் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.